வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே கண்மாயில் தண்ணீர் கேட்டு கிராமத்தினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
எம். குரும்பபட்டி கன்னிமார் சத்திரம் கண்மாய்க்கு மருதாநதி அணையில் இருந்து நேரடி பாசனம் கிடையாது. எம். வாடிப்பட்டி கோபாலசமுத்திரம், ஒட்டுப்பட்டி சொட்டாங்குளம் கண்மாய் மறுகால் தண்ணீர் மட்டுமே செல்லும்.சமீபத்திய மழையால் மருதாநதி அணையின் பாசன கண்மாய்கள் 75 சதவீதம் நிரம்பின. இதனால் குரும்பபட்டி கண்மாய்க்கும் தண்ணீர் கேட்டு பத்து நாட்களாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர்.
பொதுப்பணித் துறையினரோ 'கண்மாயின் மறுகால் தண்ணீர் மட்டுமே கொடுக்க முடியும்' என்றனர். விரக்தியடைந்த குரும்பபட்டி, வெங்கடாஸ்த்திரிகோட்டை, மல்லணம்பட்டி கிராமத்தினர் நேற்று மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., முருகன், பொதுப்பணித் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சொட்டான்குளத்திலிருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என பொதுப்பணித் துறையினர் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. 25 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE