சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக வலை தளங்கள் கண்காணிப்பு; அவதூறு பரப்பியவர் கைது

Added : டிச 17, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : சமூக வலை தளங்கள் கண்காணிக்கப்படும் சூழலில், நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சமூக வலை தளங்களில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தனி மதம், சாதி, தலைவர்களை வசைபாடுவது அதிகரித்துள்ளது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.திண்டுக்கல்லில் எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் சைபர் செல் தனிப்படை

திண்டுக்கல் : சமூக வலை தளங்கள் கண்காணிக்கப்படும் சூழலில், நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலை தளங்களில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தனி மதம், சாதி, தலைவர்களை வசைபாடுவது அதிகரித்துள்ளது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.திண்டுக்கல்லில் எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் சைபர் செல் தனிப்படை இன்ஸ்பெக்டர் தங்கராசு தலைமையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. எஸ்.பி., உத்தரவின்பேரில் வத்தலகுண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சைபர் செல் போலீஸ் உதவியோடு அவதூறு பரப்பியவர் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.இச்செயலில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் எனத் தெரிந்தது. தனிப்படை போலீசார், வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் பவுலோஸ் குழு கன்னியாகுமரி சென்று சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர். சைபர் செல் போலீசாரை எஸ்.பி., ரவளிப்பிரியா பாராட்டினார்,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X