திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 1715 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறிய நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதிகவேகத்தில் சென்றதாக 16 வழக்குகள், அலைபேசி பேசியபடி வாகனத்தில் சென்றதாக 226, சிக்னல் விதிமீறல் 40, மதுஅருந்தி ஓட்டியதாக 2, சரக்கு வாகனத்தில் ஆட்கள் சென்றதால் 91, தலைக்கவசம் அணியாதது 628, பில்லியனில் அமர்ந்திருப்பவர் தலைக்கவசம் அணியாதது 140, சீட் பெல்ட் அணியாததற்காக 572, என 1715 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE