சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேடசந்துாரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
வேடசந்துார் : வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் வழக்குகளை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்வதை கண்டித்து வேடசந்துார் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வேடசந்துார் தாலுகாவில் வேடசந்துார், எரியோடு, வடமதுரை, வடமதுரைமகளிர், குஜிலியம்பாறை, கூம்பூர் என ஆறு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில்பதிவாகும் வழக்குகள் வேடசந்துார்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.தற்போது, வடமதுரை

வேடசந்துார் : வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் வழக்குகளை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்வதை கண்டித்து வேடசந்துார் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேடசந்துார் தாலுகாவில் வேடசந்துார், எரியோடு, வடமதுரை, வடமதுரைமகளிர், குஜிலியம்பாறை, கூம்பூர் என ஆறு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில்பதிவாகும் வழக்குகள் வேடசந்துார்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.தற்போது, வடமதுரை காவல் நிலைய வழக்குகளை திண்டுக்கல் குற்றவியல் நடுவர்நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரிக்கின்றனர். இதனால் வேடசந்துார் பகுதிவழக்கறிஞர்கள் பாதிப்பதுடன், பொதுமக்கள்,வழக்கறிஞர்கள் அலைச்சலுக்கு ஆளாவதாக கருதுகின்றனர்.

எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேடசந்துார் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகேசன்தலைமை வகித்தார். பழைய நிலை தொடர வலியுறுத்தி, டிச.18 ல் உண்ணாவிரதம், டிச.22ல் மறியல் செய்வது, அதுவரை காலவறையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்றும் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X