திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் கணேசன் பேசினார். நிர்வாகிகள் ராணி, மாரியப்பன், அழகர்சாமி, தவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 'ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், தொட்டி சுத்தம் செய்ய ரூ.1000 வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஆப்பரேட்டர்களுக்கு ரூ.1400, துாய்மை காவலர்களுக்கு ரூ.1000 க்கான அரசாணை வெளியிட வேண்டும்.ஊராட்சிகளில் 7 வது ஊதியக்குழு ஊதியம், நிலுவை தொகையை வழங்க வேண்டும். பொங்கலுக்கு முன் ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE