வத்தலக்குண்டு : விராலிப்பட்டி அருகே மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
மதுரைக்கு லோயர் கேம்பில் முல்லைப் பெரியாறு குறுக்கே தடுப்பணை கட்டி குழாய் வழியாக தண்ணீர் கொண்டுவரும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ரூ. 1295 கோடியில் தொடங்கிய திட்டத்தில் தற்போது குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பண்ணைபட்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து லோயர்கேம்ப் வரை ரூ. 318 கோடியில் குழாய்கள் பதிக்கின்றனர்.
பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி., திறனில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி ரூ.122 கோடியில் துவங்கியுள்ளது. திட்ட அலுவலர்கள் கூறுகையில், "லோயர் கேம்பிலிருந்து பண்ணைப்பட்டி வரை குழாய் பதித்து முடிந்ததும், மதுரைக்கு 54 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் பொருத்தும் பணி நடைபெறும்" என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE