பொது செய்தி

தமிழ்நாடு

குடகனாறு பாதுகாப்புக்காக ஆன்மிக யாத்திரை

Added : டிச 17, 2020
Share
Advertisement
செம்பட்டி : குடகனாற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆத்துார் முதல் அழகாபுரி அணை வரை சாதுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது.அகில பாரதிய சன்னியாசிய சங்க தலைவர் ராமானந்தா சுவாமி தலைமை வகித்தார். ஆத்துார் நீர்தேக்கம் முதல் அழகாபுரி அணை வரை கரையோர கிராமங்களில், பிரசாரம் நடந்தது.குடகனாறு பாதுகாப்பு முறை, அவசியம், வழிபாட்டு முக்கியத்துவம், துாய்மை

செம்பட்டி : குடகனாற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆத்துார் முதல் அழகாபுரி அணை வரை சாதுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது.

அகில பாரதிய சன்னியாசிய சங்க தலைவர் ராமானந்தா சுவாமி தலைமை வகித்தார். ஆத்துார் நீர்தேக்கம் முதல் அழகாபுரி அணை வரை கரையோர கிராமங்களில், பிரசாரம் நடந்தது.குடகனாறு பாதுகாப்பு முறை, அவசியம், வழிபாட்டு முக்கியத்துவம், துாய்மை பராமரிப்பு, அடிப்படை அம்சங்கள் குறித்து விளக்கினர். இவருடன், தஞ்சாவூர் சுவாமி கோரக்கானந்தா, கடலுார் சுவாமி மேகானந்தா, ஈரோடு சென்னிமலை சரவணானந்தா, சுவாமி அச்சுதானந்தா குழுவினர், குடகனாறு மீட்பின் அவசியம் குறித்து பேசினர்.

ராமானந்தா சுவாமி கூறுகையில், ''காவிரி, தென்பெண்ணை, தாமிரபரணி புஷ்கர யாத்திரைகளை இறையருளால் வெற்றி கரமாக நடத்தினோம். குடகனாற்றின் ஆன்மிக, அறிவியல் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், 112 கி.மீ., விழிப்புணர்வு யாத்திரை நடத்தப்படுகிறது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X