வேடசந்துார் : வெங்காய பயிர்களில் நோய் தாக்கம் காரணமாக மகசூல்இன்றி பெறும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக வேடசந்துார் விவசாயிகள் குமுறுகின்றனர்.
வேடசந்துார் ஒன்றியம் கோவிலுார் ஊராட்சி வரதராஜபுரம், தோப்புப்பட்டி, நவக்குளம்,நல்லுார், குறிங்கோடாங்கிபட்டி பகுதிகளில் சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளனர். ஒரு மாதம் ஆன நிலையில்மழை காரணமாக பயிர்கள் வாடி சுருண்டு கருகி விட்டன.இதற்கு காரணம், திருகல் நோய், கோழிக்கால் நோய் என்று கூறுகின்றனர். மருந்து தெளித்தும் சரியாகாததால், நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வரதராஜபுரத்தை சேர்ந்த விவசாயி வி.பெருமாள்சாமி கூறியதாவது: பத்து ஏக்கரில் சின்ன வெங்காயம் நடவு செய்தேன். ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சம் செலவு செய்துள்ளேன். தற்போது வெங்காய பயிர் சுருண்டு காய்கின்றன.இப்பகுதியில் 500 ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டஅனைவருமே நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். தோட்டக்கலைத்துறையினர் விசாரணை நடத்திநஷ்ட ஈடு வழங்கவேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE