பொது செய்தி

இந்தியா

'மக்களின் நன்கொடை பணத்தில் ராமர் கோயில் கட்டப்படும்'

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி : ''ராமர் கோயில் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட நாடு முழுவதும் மிகப் பெரிய பிரசார இயக்கம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையை கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்'' என அறக்கட்டளை பொது செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த
Ayodhya, temple construction, Ram Janmabhoomi, Ram mandir trust

புதுடில்லி : ''ராமர் கோயில் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட நாடு முழுவதும் மிகப் பெரிய பிரசார இயக்கம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையை கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்'' என அறக்கட்டளை பொது செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் பொது செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதி திரட்டும் மாபெரும் பிரசார இயக்க பணியினை தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நாடு முழுவதும் துவங்க உள்ளது.


latest tamil news


இதற்காக 10, 100, 1000 ரூபாய் மதிப்பிலான 'கூப்பன்'கள் அச்சிடப்பட்டுள்ளன. நன்கொடை வசூலில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படும். நான்கு கோடி 10 ரூபாய் கூப்பன்களும், எட்டு கோடி 100 ரூபாய் மற்றும் 12 லட்சம் 1000 ரூபாய் கூப்பன்களும் அச்சிடப்பட்டுள்ளன. முறையான அனுமதி இல்லாத காரணத்தினால் கோயில் கட்டுமான பணிகளுக்கு வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக் கொள்ள இயலாது.

கோயிலின் அருகாமையில் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமான பணிகளுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் பெரு நிறுவனங்களின் சமூகப்பணிகளுக்கான நிதி பெற்றுக் கொள்ளப்படும்.கட்டுமான செலவுகளுக்காக மதிப்பீடு செய்யப்படவில்லை. நன்கொடை வசூலிலும் இலக்கு நிர்ணயிக்கவில்லை. இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-202013:38:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கண்டிப்பாக என் பங்களிப்பும் இருக்கும் , மகிழ்ச்சி
Rate this:
Cancel
17-டிச-202012:51:11 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அப்போ 2011 IL கரசேவை என்று JAYA எல்லாம் அனுப்பித்தது எல்லாம் எங்கே PM CARE மாதிரி தானா இனி மேல் தான் COLLECTION / CONNECTION / CONSTRUCTION / எல்லாமுமா RAMAR உங்களின் செயல்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்
Rate this:
Cancel
prabakaran - cuddalore,குவைத்
17-டிச-202010:29:37 IST Report Abuse
prabakaran அப்படி வசூல் செய்து கட்டவேண்டிய அவசியம் என்ன? இதனால் யாருக்கு பயன்?
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-டிச-202010:38:17 IST Report Abuse
கொக்கி குமாரு கோவில் கட்டுவதில் தங்கள் பங்களிப்பும் இருக்கட்டுமே என்று நினைக்கும் உண்மையான, ஏழ்மையான சூழ்நிலையில் இருக்கும் பக்தர்களுக்கான ஏற்பாடு இது. இதுகூடவா தெரியவில்லை தங்களுக்கு. சார் குவைத்தா?...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-டிச-202011:16:15 IST Report Abuse
Chowkidar NandaIndiaஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதால் யாருக்கு பயன்? குமரியில் வள்ளுவர் சிலை அமைத்ததால் யாருக்கு பயன்? ஏரியை அழித்து வள்ளுவர் கோட்டம் கட்டியதால் யாருக்கு பயன்? இவைகளை அமைக்க ஆகும் செலவு யாருடையது....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17-டிச-202012:41:47 IST Report Abuse
Visu Iyerமனிதனாக பிறந்தவர் இறந்து தானே ஆக வேண்டும்.. அப்படி என்றால் நீங்கள் சொல்வதில் இருந்து தெரிவது என்ன என்றால்.. புரிந்தவர்களுக்கு புரியும்... மற்றவர்களுக்கு புரிந்த பிறகு புரியும்....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17-டிச-202012:42:23 IST Report Abuse
Visu Iyerகருப்பு வெள்ளையாக வேண்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X