கோலமும் சாணமும் எதற்காக
மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் இன்னும் சற்று கீழிறங்கி வருவதாக நம்பப்படுகிறது. இதனால் அதிகாலை பொழுதில் வெளியே வந்து காற்றை சுவாசிப்பது உடலுக்கு நல்லது. அதிலும் மார்கழிக்கு தனிச்சிறப்பு. அரங்கனுக்காக ஆண்டாள் பாவை நோன்பு நோற்ற 30 நாட்களும் வாசலில் அதிகாலை கோலமிட்டு சாணம்பிடித்து வைத்து பூசணிப்பூ செருக வேண்டும்.
பூசணிப்பூ கிடைக்காவிட்டால் அருகம்புல் நல்லது. 30 நாட்கள் சாணத்தை சேகரித்து வைத்து போகி அன்று அதை எரிக்கும் போது நம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும். துாங்கி எழுந்தவுடன் செய்யும் எந்த வேலையும் மனதை அமைதிப்படுத்தும். அதற்காக தான் அதிகாலை படிக்க சொல்கின்றனர். கோலமிடும் போது மனம் ஒருமுகப்படும். கோலத்தை வண்ணங்களால் அழகுபடுத்தும் போது மனம் புத்துணர்ச்சி பெறும். அதிலும் கோயில்களில் ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை கேட்டுக் கொண்டே கோலமிடுவது தியானம் செய்வதற்கு சமம். எனவே பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மார்கழியில் அதிகாலை வாக்கிங் போவது நல்லது.
ரவீனாஸ்ரீ, அச்சம்பத்து.
ஆன்மிகமும் அறிவியலும்
தமிழ் மாதங்களில் மார்கழி தான் அனைத்து நாட்களுமே இறைவனுக்கு உகந்தவை. பெண்கள் அதிகாலை எழுந்து நீராடி வாசலில் கோலமிட்டு பிள்ளையார் பிடித்து வைத்து அலங்கரிப்பார்கள். கோலத்தில் பூசணிப்பூ வைத்தால் அந்த வீட்டில் திருமணமாகாத பெண் உள்ளார் என அர்த்தம். அதை கவனித்த ஆண் பிள்ளை வீட்டார் பெண் கேட்டு செல்வர். இம்மாதம் முழுவதும் கன்னி பெண்கள் பாவை நோன்பிருந்தால் நல்ல கணவன் கிடைப்பார் என்பதும் ஐதீகம்.
அதிகாலை எழுந்து சுத்தமான ஓசோனை சுவாதித்தால் சுவாச நோய்களும் தீரும். பாசிட்டிவ் எண்ணம் ஏற்படும். பச்சரிசி மாவில் கோலமிடுவதால் எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவாக மாறும். ஆன்மிகமும் அறிவியலும் கலந்த அதிசய மாதத்தை நாம் போற்றுவோம்.
பாலுமீனா, வடக்குமாசி வீதி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE