கோயில்
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:00 மணி.பாவை பாடல், பக்திப்பாடல், கூட்டு வழிபாடு: பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நடத்துபவர்: விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, காலை 6:00 மணி.
தட்சிணாமூர்த்திக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை : சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், காலை 6:45 மணி.
தட்சிணாமூர்த்திக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதுரை, காலை 10:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, அதிகாலை 5:00 மணி, திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம், அதிகாலை 5:30 மணி, குருபகவானுக்கு பூஜை, காலை 7;00 மணி.
தட்சிணாமூர்த்திக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.
திருப்பள்ளி எழுச்சி: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், அதிகாலை 5:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.
பொது
இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர் நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.வைகை நதிக்கு ஆரத்தி விழா: ஏ.வி.பாலம், கோரிப்பாளையம், மதுரை, பங்கேற்பு: அகில பாரதி துறவியர் சங்க செயலாளர் ராமானந்தா சுவாமி, சின்மயா மிஷன் சிவயோகானந்தா சுவாமி, ஹிந்து ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், மாலை 5:30 மணி.
புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, ஏற்பாடு: டில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, காலை 9:30 முதல் இரவு 8:00 மணி.நுழைவு வாயில் பூமி பூஜை விழா: அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கடை, மதுரை, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், பங்கேற்பு: உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன், வழக்கறிஞர் பிரபுராஜதுரை, எல்.ஐ.சி., தொடர்பு அலுவலர் மலைச்சாமி, காலை 9:30 மணி.
அம்மா மினி கிளினிக் துவக்க விழா: துவரிமான், பங்கேற்பு: அமைச்சர் செல்லுார் ராஜூ, காலை 10:00 மணி.
யோகா, தியானம்
யோகா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00 மணி.யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE