திருமங்கலம் : ''எய்ம்ஸ் மருத்துவமனை வராது என கூறுபவர்கள் அங்கு சிகிச்சை பெறும் காலம் வரும்,'' என, கப்பலுாரில் நடந்த திருமங்கலம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
திருமங்கலம், எழுமலை ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், பாரதி யுவ கேந்திரா சார்பில் கலந்துரையாடல் நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாது என்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறுகின்றனர். மருத்துவமனை அமைய நிதியுதவி செய்யும் ஜப்பான் கூட்டுறவு முகமையைச் சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட முறை ஆய்வு செய்து தோப்பூர் சரியான தேர்வு என சான்றளித்துள்ளனர்.
கொரோனா பரவலால் ஜப்பான் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடக்கிறது. அதன்பின் விரைந்து மருத்துவமனை கட்டப்படும்.பார்லிமென்டில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு அதற்கு நிதி நிலை அறிக்கை கமிட்டியும் அமைத்து இருக்கிறார்கள்.
எனவே விரைவில் பணிகள் துவங்கும். மதுரை வளர்ச்சி முக்கியமா, பதவி முக்கியமா என்ற கேள்வி வந்தால் மதுரை வளர்ச்சி தான் எனக்கு முக்கியம். திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகாக்களிலுள்ள கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடந்ததால், தற்போது நிரம்பியுள்ளன, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE