சென்னை: கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சிப் பானர்ஜியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த, 2019 நவ., 11ல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஏ.பி.சாஹி பதவியேற்றார். இவரது பதவிக் காலம், வரும், 31ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலீஜியம், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சிப் பானர்ஜியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, பரிந்துரை செய்துஉள்ளது.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் இந்த பரிந்துரை, மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், சென்னை உயர் நீதிமன்றத்தின், 50வது தலைமை நீதிபதியாக, அவர் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 1961 நவ., 2ல் பிறந்த சஞ்சிப் பானர்ஜி, கோல்கட்டா பல்கலையில் சட்டப் படிப்பை முடித்து, 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். கோல்கட்டா, டில்லி, ஜார்க்கண்ட், அலகாபாத், மும்பை ஆகிய உயர் நீதிமன்றங்களில், வழக்கறிஞராக தொழில் செய்தார்.

கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், 2006 ஜூன், 22ல், நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அதன் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார்.வினித் கோத்தாரி மாற்றம்சென்னை உயர் நீதிமன்றத்தில், இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள வினித் கோத்தாரியை, குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யவும், கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE