பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் பணிகள்; வருகிறது தேர்தல் கமிஷன் குழு

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, தேர்தல் கமிஷன் செயலர் தலைமையிலான குழு, வரும், 21ம் தேதி, தமிழகம் வருகிறது; கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தேர்தல் பணிகள் குறித்து, ஆலோசனை நடத்த உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் துவக்கி உள்ளன. தேர்தல்
TN Election, EC, Election Commission

சென்னை: தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, தேர்தல் கமிஷன் செயலர் தலைமையிலான குழு, வரும், 21ம் தேதி, தமிழகம் வருகிறது; கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தேர்தல் பணிகள் குறித்து, ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் துவக்கி உள்ளன. தேர்தல் கமிஷனும், தேர்தலுக்கான ஆரம்பப் பணிகளை துவக்கி உள்ளது. கடந்த மாதம், 16ம் தேதி, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவக்கப்பட்டது.

நேற்று முன்தினம் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பொது மக்கள் வசதிக்காக, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம் வரை, பெயர் சேர்க்கக் கோரி, 20 லட்சத்து, 99 ஆயிரத்து, 915 பேர்; பெயர் நீக்கக் கோரி, 4.43 லட்சம் பேர்; திருத்தம் கோரி, 3.36 லட்சம் பேர்; முகவரி மாற்றக் கோரி, 1.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


latest tamil news



நேற்று முன்தினம் வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை, ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. ஜன., 20ம் தேதி, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உட்பட, தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தேர்தல் கமிஷன் செயலர் உமேஷ் சின்ஹா தலைமையில், உயர்நிலைக் குழு, 21ம் தேதி, தமிழகம் வர உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று தெரிவித்தார்.

உமேஷ் சின்ஹா, 21ம் தேதி காலை, 11:30 மணிக்கு முன், அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற உள்ளார். தொடர்ந்து, கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார்.மறுநாள், 22ம் தேதி, உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X