கோபி: கோபியில், பல்வேறு அரசு துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா, 155 பேருக்கு, முதியோர் ஓய்வூதியம், 154, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 64, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 556 பேருக்கு என, மொத்தம், 1.70 கோடி ரூபாயில், 966 பேருக்கு அமைச்சர் செங்கோட்டையன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, ஈரோடு கலெக்டர் கதிரவன் பேசியதாவது: விபத்து காப்பீடு போல், மற்றொரு காப்பீடு திட்டம், விரைவில் வரவுள்ளது. வருமானம் ஈட்டும் குடும்ப தலைவர் இறந்தால், காப்பீடு திட்டம் மூலம், விபத்து எனில் நான்கு லட்சம் ரூபாய், இயற்கை மரணம் எனில் இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். இதற்கான சர்வே தற்போது நடந்து வருகிறது. சர்க்கரை வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அதனால், தற்போது சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டாக மாற்றி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில், 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் யாரேனும் விருப்பம் இருந்தால், மாவட்ட வழங்கல் அலுவலர், இ-சேவை மையம் அல்லது சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE