சென்னிமலை: குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில், எல்லைகிராம ஊராட்சிக்கு உட்பட்ட, எல்லை குமாரபாளையம் பகுதியில், கிணறு தோண்டி அதிலிருந்து பைப் லைன் அமைத்து, முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் வழங்க, எல்லைகிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எல்லைகுமாரபாளையம் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணியளவில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஊராட்சி தலைவர் இல்லாததால், செயலாளரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து, எல்லைகுமார பாளையம் மக்கள் கூறியதாவது: எங்கள் ஊர் மயானத்துக்கு அருகே, ஏற்கனவே ஒரு குட்டை அமைக்கப்பட்டுள்ளதால், மயானத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் குட்டை அமைத்து, அங்கு கிணறு தோண்டினால், நாங்கள் மயானத்தை இழப்பதுடன், வறட்சி காலத்தில் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த திட்டத்திற்கு, ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE