பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டத்தில் நுழைந்த நான்கு யானைகள்; கர்நாடகாவுக்கு விரட்டியடித்த வனத்துறை

Added : டிச 17, 2020
Share
Advertisement
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, விவசாய தோட்டத்தில் நுழைந்த நான்கு யானைகளை, கர்நாடகா மாநில எல்லைக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி வனப்பகுதியில், ஏராளமான யானைகள் உள்ளன. உணவு, குடிநீர் தேடி, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், அருகிலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில், தாளவாடி வனப்பகுதியை

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, விவசாய தோட்டத்தில் நுழைந்த நான்கு யானைகளை, கர்நாடகா மாநில எல்லைக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி வனப்பகுதியில், ஏராளமான யானைகள் உள்ளன. உணவு, குடிநீர் தேடி, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், அருகிலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில், தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள, அருள்வாடி கிராமத்தில் பட்டு வளர்ச்சி துறைக்கு சொந்தமான, முட்புதர் காட்டில் முகாமிட்டிருந்த நான்கு யானைகள், நேற்று முன்தினம் இரவு சாலையை கடந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள, விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியை யானைகள், சேதப்படுத்தியது. அச்சமடைந்த விவசாயிகள், ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ரேஞ்சர் முத்து தலைமையிலான வனத்துறை ஊழியர்கள், நான்கு யானைகளை பட்டாசு வெடித்து ஒரு மணி நேரம் போராடி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மீன்கரை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள, கிராமத்துக்குள் யானைகள் மீண்டும் நுழைய துவங்கியுள்ளதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X