பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிய விரைவு செஸ் போட்டி: தங்கப்பதக்கம் வென்ற ஈரோடு மாணவன்

Added : டிச 17, 2020
Share
Advertisement
ஈரோடு: ஆன்லைன் மூலம் நடந்த, ஆசிய விரைவு செஸ் போட்டியில், ஈரோடு மாணவன் தங்கப்பதக்கம் வென்றார்.ஆசிய செஸ் சாம்பியன், 2020 போட்டி கடந்த, 11 முதல், 13 வரை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில், இந்திய அணிக்காக ஈரோட்டை சேர்ந்த இளம் செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான இனியன் விளையாடினார். இதில், 18 நாடுகளில் இருந்து சர்வதேச வீரர்கள், 28 பேர் கலந்து

ஈரோடு: ஆன்லைன் மூலம் நடந்த, ஆசிய விரைவு செஸ் போட்டியில், ஈரோடு மாணவன் தங்கப்பதக்கம் வென்றார்.


ஆசிய செஸ் சாம்பியன், 2020 போட்டி கடந்த, 11 முதல், 13 வரை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில், இந்திய அணிக்காக ஈரோட்டை சேர்ந்த இளம் செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான இனியன் விளையாடினார். இதில், 18 நாடுகளில் இருந்து சர்வதேச வீரர்கள், 28 பேர் கலந்து கொண்டனர். ஏழு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், நான்கு சுற்றுகளில் இனியன் வெற்றியும், மூன்று சுற்றுகளை சமன் (டிரா) செய்தும் இருந்தார். மொத்தம், 5.5 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் வரும், 19 முதல், 23 வரை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ள, உலக இளைஞர் விரைவு செஸ் சாம்பியன் போட்டியில், பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, கிராண்ட் மாஸ்டர் இனியனுக்கு, வாழ்த்துகள் குவிகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X