ஈரோடு: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெற, பிணை ஆவணத்தை பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய, முத்திரை வரிக்கு அரசு விலக்கு அளித்துள்ளதுடன், பதிவு கட்டணத்தையும் குறைத்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுயசார்பு இந்தியா திட்டத்தில், 2021 மார்ச், 31 வரை வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற, பிணை ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்யும்போது, பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து, 0.1 சதவீதமாகவும், அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் வரியை குறைத்துள்ளது. தகுதியான நிறுவனங்கள் மார்ச், 31 வரை இச்சலுகையில் பயன் பெறலாம் என, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE