பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 27 முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
பவானி: தமிழகத்தில் வரும், 27 முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.ஈரோடு மாவட்டம், பவானியில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சங்க, மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களிடம்கூறியதாவது; வரும், 27 முதல் நடைபெறும், லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில்,

பவானி: தமிழகத்தில் வரும், 27 முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.


ஈரோடு மாவட்டம், பவானியில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சங்க, மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களிடம்கூறியதாவது; வரும், 27 முதல் நடைபெறும், லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழகத்தில் மட்டும், 4.5 லட்ச கனரக வாகனங்கள், ஒன்பது லட்சம் சிறிய வாகனங்கள் ஓடாது. மருந்து, பால், தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் மட்டுமே இயங்கும். லாரிகள் இயங்காததால் தினமும், 1,000 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படும். கட்டுப்பாட்டு கருவிகள் தயாரிக்கும், 140 நிறுவனங்களுக்கு அப்ரூவல் உள்ளது. ஆனால், எட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எங்கு வேண்டுமானாலும் கருவிகள் வாங்கி கொள்ளலாம் என்று, நீதிமன்றம் அறிவுறுத்தியும், தமிழக அரசு ஏற்க மறுப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வேலை நிறுத்தத்தின் போது, தமிழகத்திற்கு வெளிமாநில லாரிகள் வராது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X