மொடக்குறிச்சி: கருடாழ்வார் சிலை உடைத்தது தொடர்பாக, மணப்பாறை சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி யூனியன், 24 வேலம்பாளையம் பஞ்., பகுதியில், கனககிரி மலை நடுவில், பாமா ருக்மணி சமேத ஆதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இதன் எதிரே, கருடாழ்வார் சிலை உள்ளது. கடந்த, 13ல், இரண்டு அடி உயரம் கொண்ட கருடாழ்வார் சிலை, உடைக்கப்பட்டிருந்தது. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததுடன், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா உதவியுடன், அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த, 15 வயது மகனை போலீசார் கைது செய்தனர். அதில், பெற்றோர் இறந்ததால், பல மாதங்களாக சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், கண்டிக்காடு வலசில் உள்ள பெரியப்பாவுடன் வசித்து வந்துள்ளார். சிலை உடைத்த நாளன்று, வழியில் உள்ள மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு, கனககிரி மலை மீது சென்று, கோவிலில் தங்கியுள்ளார். பின்னர், கல்லை கொண்டு, கருடாழ்வார் சிலையை சிறுவன் உடைத்துள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE