ஓமலூர்: ஓமலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஓமலூர் பேரூராட்சியில், நிலுவையில் உள்ள குடிநீர், சொத்து வரி, கடை வாடகை பாக்கி, தொழில் வரி, உரிம கட்டணங்களை, டிச., 31க்குள் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறினால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, இதர இனங்களுக்கு நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதேபோல், வனவாசி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பிப்., 28க்குள் வரியினங்களை செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE