சேலம்: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் மூலம், கொரோனா தடுப்பு, பாதுகாப்பு வழிமுறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக நேற்று, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், 280க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், ஆரோக்கியம், சுகாதாரம், உளவியல் சார்ந்த பாதுகாப்பு அம்சம், மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கும், கடமைகளும் என்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 18, 19ல், பட்டதாரி ஆசிரியர்கள், 21, 22ல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்பது கட்டாயம். 'எமிஸ்' இணையதளம் மூலம் கண்காணிக்கப்படுவர் என, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி எச்சரித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE