பொது செய்தி

தமிழ்நாடு

நேற்று 49 பேருக்கு தொற்று

Added : டிச 17, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 23 பேர், மேட்டூர், 4, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணத்தில் தலா, 3, மகுடஞ்சாவடி, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூரில் தலா, 2, இடைப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, சேலம் ஒன்றியம், தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் தலா ஒருவர் என, மாவட்டத்தில், 48 பேர், நாமக்கல்லிலிருந்து

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 23 பேர், மேட்டூர், 4, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணத்தில் தலா, 3, மகுடஞ்சாவடி, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூரில் தலா, 2, இடைப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, சேலம் ஒன்றியம், தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் தலா ஒருவர் என, மாவட்டத்தில், 48 பேர், நாமக்கல்லிலிருந்து வந்த ஒருவர் என, சேலத்தில், 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சேலத்தை சேர்ந்த, 62 வயது முதியவர், சேலம் அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார்.
ஜி.ஹெச்.,ல் முதல்முறை: மேட்டூர், சதுரங்காடியை சேர்ந்த, 60 வயது முதியவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 10ல், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11ல், அவரது, 47 வயது மனைவி, 21 வயது மகள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, முதியவர் உயிரிழந்தார். கொரோனாவால் ஒருவர் இறந்தது, மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதல்முறை என, மருத்துவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X