சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது டிராக்டர் மோதல்: டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
கெங்கவல்லி: பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கார் டிரைவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர். கெங்கவல்லி, குறும்பர் தெருவை சேர்ந்த, அப்துல்ரகுமான் மகன் ஹாரீஷ், 24, ஜாகீர்உசேன் மகன் ரியாஸ் அகமது, 23. வாழப்பாடியை சேர்ந்தவர் கண்ணன், 25. நண்பர்களான இவர்கள், கார் டிரைவராக பணிபுரிந்து வந்தனர். நேற்று, கெங்கவல்லியில் இருந்து, தம்மம்பட்டியில் உள்ள நண்பர் வீட்டுக்கு,

கெங்கவல்லி: பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கார் டிரைவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர். கெங்கவல்லி, குறும்பர் தெருவை சேர்ந்த, அப்துல்ரகுமான் மகன் ஹாரீஷ், 24, ஜாகீர்உசேன் மகன் ரியாஸ் அகமது, 23. வாழப்பாடியை சேர்ந்தவர் கண்ணன், 25. நண்பர்களான இவர்கள், கார் டிரைவராக பணிபுரிந்து வந்தனர். நேற்று, கெங்கவல்லியில் இருந்து, தம்மம்பட்டியில் உள்ள நண்பர் வீட்டுக்கு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், மூவரும் புறப்பட்டனர். மாலை, 4:00 மணிக்கு, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகர் சென்றபோது, கூடமலையில் இருந்து, கெங்கவல்லி நோக்கி, கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே ஹாரீஷ் உயிரிழந்தார். ரியாஸ்அகமது, கண்ணன் படுகாயமடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கெங்கவல்லி போலீசார், டிராக்டரை விட்டு தப்பி ஓடிய டிரைவர் செந்திலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X