ஓசூர்: கெலமங்கலம், மின்வாரிய பொறியாளரிடம் தகராறில் ஈடுபட்ட, கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் கண்ணையன், 51; இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அங்கு, ஒன்னுகுறுக்கையை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவீந்திரா, 47, என்பவர் வந்தார். பின் அவர், தன் வீட்டிற்கு மின்கட்டணம் அதிகமாக வருவதாக கூறி, உதவி பொறியாளர் கண்ணையனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தையால் பேசினார். இது தொடர்பாக, கண்ணையன், கெலமங்கலம போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவீந்திராவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE