பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல பூஜை நிறைவு விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை நரசிம்மசுவாமி கோவில் தெருவிலுள்ள, தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 48வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் நேதாஜி சாலை, காந்திசிலை வழியாக சென்று, பின் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து ஊர்வலத்தில் பக்தர்களால்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை நரசிம்மசுவாமி கோவில் தெருவிலுள்ள, தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 48வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் நேதாஜி சாலை, காந்திசிலை வழியாக சென்று, பின் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து ஊர்வலத்தில் பக்தர்களால் எடுத்து வரப்பட்ட பாலைக்கொண்டு அம்மனுக்கு, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X