கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க, வட்டார அளவில், சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவங்குவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு, வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, அதன் மூலம், அடையாள அட்டை வழங்கப்படும். அதன்படி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்று (டிச., 17) முகாம் துவங்குகிறது. இதன்படி, 18ல் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 19ல் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 21ல் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 22ல் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 23ல் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 24ல் வேப்பனஹள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 29ல் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 30ல் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும், 31ல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE