பொது செய்தி

தமிழ்நாடு

மலை கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் 202 பேர் கண்டுபிடிப்பு

Added : டிச 17, 2020
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் நடந்த, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பின்போது, 202 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 21 முதல், கடந்த, 10 வரை பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மலை கிராமங்களை அதிகம் கொண்ட, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் நடந்த, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பின்போது, 202 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 21 முதல், கடந்த, 10 வரை பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மலை கிராமங்களை அதிகம் கொண்ட, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களை உள்ளடக்கிய தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், கொடகரை, தொளுவபெட்டா, டி.பழையூர், தொட்டமஞ்சு உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில், 11 முதல், 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பள்ளி இடை நிற்பது அதிகம். வறுமையால், பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு, குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பழக்கம் உள்ளது. எனவே, மலை கிராமங்களில், ஆய்வு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 20 நாட்கள் நடந்த இந்த கணக்கெடுப்பு பணியில், கெலமங்கலத்தில், 132 பேர், தளியில், 70 பேர் என, மொத்தம், 202 பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மீட்கப்பட்டனர். பின், அவர்களது வயது அடிப்படையில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில், மலை கிராமங்கள் அதிகளவில் உள்ளதால், எட்டாம் வகுப்பு முடித்த பின், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் குறைவு. அவர்களை, பெற்றோர் பயப்படாமல் பள்ளிக்கு அனுப்பும் வகையில், உனிசெட்டி மலை கிராமத்தில், மாணவ, மாணவியருக்கு தனியாக விடுதி அமைத்து தந்தால், கெலமங்கலம் ஒன்றியத்தில் பள்ளி இடை நிற்பது குறையும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X