பொது செய்தி

தமிழ்நாடு

தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த 40 யானைகள்

Added : டிச 17, 2020
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு, 40க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட யானைகளும், நொகனூர் காப்புக்காட்டில், 10க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டிருந்தன. இவை,

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு, 40க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட யானைகளும், நொகனூர் காப்புக்காட்டில், 10க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டிருந்தன. இவை, நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலுள்ள சூரப்பன் குட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. தற்போது, 40க்கும் மேற்பட்ட யானைகளும், ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, வனச்சரகர் சுகுமார் தலைமையில் குழு அமைத்து, கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். மேலும், தேன்கனிக்கோட்டை சூரப்பன்குட்டை வனப்பகுதியை ஒட்டிய பேவநத்தம், ஜார்க்கலட்டி, பாலேகுளி, லட்சுமிபுரம், கோட்டட்டி சுற்று வட்டார கிராம மக்கள், விறகு சேகரிக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்துக்கு, விவசாயிகள், அதிகாலை நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X