ஓசூர்: சூளகிரி ஒன்றியம், கோனேரிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சப்படி, குருபசப்படி, குண்டுகுறுக்கி, கோட்டராலப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 230 ஏழை, எளிய பயனாளிகள் மற்றும் மாரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட தொட்டூர், மைதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும், 125 பேர் என மொத்தம், 355 பயனாளிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மொத்தம், 35.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒவ்வொரு பயனாளிக்கும் தலா நான்கு ஆடுகள் வீதம், 1,420 விலையில்லா ஆடுகளை, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் நேற்று வழங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் இளவரசன், கால்நடை மருத்துவர் ராஜேஷ், பஞ்., தலைவர் மணிமேகலை சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE