கிருஷ்ணகிரி: ''தமிழகத்தில், வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்கள், வரும் சட்டசபை தேர்தலில், விவசாயிகளால் அப்புறப்படுத்தப் படுவார்கள்,'' என, காங்., - எம்.பி., செல்லகுமார் கூறினார். கிருஷ்ணகிரியில், வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், மூன்றாவது நாளாக நேற்று, காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., செல்லகுமார், நிருபர்களிடம் கூறியதாவது: 'வேளாண் திருத்தச்சட்டம் மூலம், எந்த மாநிலத்தில் வேண்டும் என்றாலும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யலாம்' என, தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அரை ஏக்கர் நிலமுள்ள ஒரு விவசாயி, தமிழகத்திலிருந்து மும்பை போன்ற மாநிலத்தில், தங்கள் பொருட்களை எவ்வாறு விற்பனை செய்வார். தமிழகத்தில், வேளான் சட்டத்தை ஆதரிப்போர், வரும் சட்டசபை தேர்தலில், விவசாயிகளால் அப்புறப்படுத்தப் படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE