கிருஷ்ணகிரி: சொட்டுநீர் பாசனத்துக்கு குழி எடுப்பதற்கு, மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், தோட்டக்கலை பயிர்களுக்கு, சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தில், தேவையான பிரதான குழாய்கள், துணை பிரதான குழாய்கள் பதிக்க, 1.5 முதல், 2 அடி அகலம், 2 அடி ஆழத்தில், குழி எடுக்க வேண்டி உள்ளது. இதற்காக விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு உதவும் விதமாக, சொட்டு நீர் பாசனம் அமைக்க, குழி எடுப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஹெக்டேருக்கு, 3,000 ரூபாய் வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 2 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்துக்கு விண்ணப்பிக்கும் போதே, குழி எடுப்பதற்கான மானியத்துக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். சொட்டுநீர் பாசனத்தில் பயன் பெற, தோட்டக்கலைத்துறையில் பதிவு செய்து, விண்ணப்பிக்கலாம். இது தவிர, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE