சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் மனைவி தர்ணா

Added : டிச 17, 2020
Share
Advertisement
ஆத்தூர்: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, அவரது வீட்டின் முன், குழந்தையுடன், மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.சேலம் மாவட்டம், ஆத்தூர், தாண்டவராயபுரம் ஊராட்சி, வ.உ.சி., நகரை சேர்ந்த, சின்னதுரை மகள் சத்யா, 29. முதுகலை பட்டம் படித்த இவர், தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஆத்தூர், அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த, நமச்சிவாயம் மகன் பிரபு, 31. இவர், நரசிங்கபுரம் நகராட்சியில்,

ஆத்தூர்: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, அவரது வீட்டின் முன், குழந்தையுடன், மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.


சேலம் மாவட்டம், ஆத்தூர், தாண்டவராயபுரம் ஊராட்சி, வ.உ.சி., நகரை சேர்ந்த, சின்னதுரை மகள் சத்யா, 29. முதுகலை பட்டம் படித்த இவர், தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஆத்தூர், அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த, நமச்சிவாயம் மகன் பிரபு, 31. இவர், நரசிங்கபுரம் நகராட்சியில், ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவரும், சத்யாவும் காதலித்து, 2019, மார்ச், 13ல், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். ஒரு வயதில் லித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆனால், மணமான நான்கு மாதத்தில், அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். நேற்று, தன் குழந்தையுடன், சத்யா, அக்கிசெட்டிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றார். வீடு பூட்டியிருந்ததால், கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆத்தூர் மகளிர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'கணவர் வீடு கட்ட, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்தேன். தற்போது வாடகை வீட்டில் வசிப்பதால், குழந்தையுடன் வசிக்க இடம் வேண்டும். தன் கணவரை, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, சத்யா கூறினார். போலீசார், 'உன் கணவர், நீதிமன்றத்தில் விவகாரத்து மனு செய்துள்ளதாக கூறுவதால், நீதிமன்றம் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்றனர். பின், ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X