மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியத்தில், மேற்கொள்ளப்படவிருக்கும் பல்வேறு பணிகளை, பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மல்லசமுத்திரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களில், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள சமுதாயகூடம் அமைத்தல், தார்ச்சாலை அமைத்தல், கழிவறை கட்டுதல், மின்விளக்கு, பேவர்பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். மல்லசமுத்திரம் சேர்மன் அலமேலு, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE