பொது செய்தி

தமிழ்நாடு

பால் பணம் வழங்குவதில் நாமக்கல் ஆவின் சாதனை

Added : டிச 17, 2020
Share
Advertisement
ப.வேலூர்: தேசிய பால்வள வாரியம் மூலம் தேசிய அளவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் முறையில் பால் பணம் வழங்குவதற்கு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான விருதை, தமிழக அளவில் ஆவின் நாமக்கல் ஒன்றியம் பெற்றுள்ளது. தேசிய பால்வள தந்தை என போற்றப்படும் டாக்டர்.வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவ.,26 தேசிய பால்தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டிஜிட்டல்

ப.வேலூர்: தேசிய பால்வள வாரியம் மூலம் தேசிய அளவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் முறையில் பால் பணம் வழங்குவதற்கு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான விருதை, தமிழக அளவில் ஆவின் நாமக்கல் ஒன்றியம் பெற்றுள்ளது. தேசிய பால்வள தந்தை என போற்றப்படும் டாக்டர்.வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவ.,26 தேசிய பால்தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டிஜிட்டல் முறையில் பால் பணம் வழங்குவதற்கு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான விருதை தமிழக அளவில் ஆவின் நாமக்கல் ஒன்றியம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கான பாராட்டு சான்றிதழை, மின்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் ஆவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொதுமேலாளர் சுந்தரவடிவேலிடம் வழங்கினார். மேலும், தமிழக அளவில் டிஜிட்டல் பால் உற்பத்தியாளர்களுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் பணமுடிப்பு, 5,000 ரூபாயை கவுண்டிபாளையத்தை சேர்ந்த மணிவண்ணன், வீரகுட்டையை சேர்ந்த முருகராஜ் மற்றும் செங்கப்பள்ளியை சேர்ந்த நடராஜன் ஆகியோருக்கு, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார். நாமக்கல் ஆவின் நிர்வாக மேலாளர் சின்னுசாமி, உதவி பொதுமேலாளர் திருமுருகன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X