பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட ஒப்புதலுக்கான கூட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம், பஞ்சாயத்தில் மக்கள் பங்கேற்புடன் கூடிய, பஞ்., வளர்ச்சி திட்டத்தில், முதலீட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கான ஊர்க்கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் குமார் தலைமை வகித்தார். இதில், பஞ்., பகுதியில் எடுக்கப்பட்ட கள

குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம், பஞ்சாயத்தில் மக்கள் பங்கேற்புடன் கூடிய, பஞ்., வளர்ச்சி திட்டத்தில், முதலீட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கான ஊர்க்கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் குமார் தலைமை வகித்தார். இதில், பஞ்., பகுதியில் எடுக்கப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், கிராமங்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்து, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், கட்டமைப்பு வசதிகளை, மேம்படுத்துவதற்கான திட்டங்கள், உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் அமைப்பதற்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட வட்டார அணி தலைவர் ரமேஷ், திட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். பஞ்., துணை தலைவர் பாலு, வி.ஏ.ஓ., கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X