பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகம்

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவமழை, இயல்பை விட 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் , வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.அடுத்த 2
வடகிழக்குபருவமழை, கடலோர மாவட்டங்கள், மழை, தென்மாவட்டங்கள், சென்னைவானிலைமையம்,

சென்னை: வடகிழக்கு பருவமழை, இயல்பை விட 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் , வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.


latest tamil news


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.

வடகிழக்கு பருவமழையானது, அக்., 1 முதல் இன்று வரை 455 மி.மீ., பெய்துள்ளது. பெய்ய வேண்டிய மழை அளவு 419 மி.மீ.,. இதன் மூலம் 8 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X