பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருவனந்தபுரம்: சபரிமலையில் டிச.,20ம் தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பேருக்கு பதிலாக 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த பல மாதங்களாக மாத பூஜை நாட்களில் கூட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை
Sabarimala, Devotee, Permit, சபரிமலை, பக்தர்கள், அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் டிச.,20ம் தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பேருக்கு பதிலாக 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.

கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த பல மாதங்களாக மாத பூஜை நாட்களில் கூட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி வார நாட்களில் தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-டிச-202015:14:14 IST Report Abuse
J.Isaac தளர்வு கொடுத்துவிட வேண்டும். சொல் புத்தி, சுய புத்தி இல்லாதவர்கள் அனுபவிக்க வேண்டியதுதான். தேவஸ்தான போர்டுக்கு வேண்டியது வருமானம்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
17-டிச-202014:57:00 IST Report Abuse
J.Isaac அறியாமையில் உள்ள மக்களை நினைத்தால் வேதனை தான் சென்னை ஐஐடி நிலைதான் இங்கு வரப்போகிறது
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
17-டிச-202013:56:41 IST Report Abuse
தத்வமசி உள்ளாட்சி தேர்தலில் இடது சாரிகள் மீண்டும் அமோகமான வெற்றி. கொண்டாடுங்கள். ஐந்தாயிரம் என்ன பத்தாயிரம் பேரை நீங்கள் அனுமதித்தாலும் உண்டியலில் கொண்டு வந்து கொட்ட இந்து தயாராக இருக்கிறான். வோட்டு போடும் போதே தெரியவில்லை இந்துக்கள் எவ்வளவு இருக்கறார்கள் என்று. பந்தளம், கொச்சின், பாலக்காடு போன்ற இடங்களில் கொஞ்சம் விழித்துக்கொண்டுள்ளனர். கும்பகர்ணன் உறங்கவில்லை. இந்துக்கள் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஐம்பது சதவிகிதத்திற்கு கீழே வந்துவிட்ட பிறகும் உறங்கிக்கொண்டு இருபது தான் ஆச்சரியமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X