தமிழக நிகழ்வு ! * மதுரை மாவட்டம் செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்பாண்டியன் . இவர் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். இவர் லஞ்சப்புகாரில் மதுரை சிறப்பு கோர்ட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இன்று ( 17 ம் தேதி )மனைவியை கத்தியால் குத்தி கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* வேலூர்மாவட்டம்,வேலூர் தொரப்பாடியில் சிறைக்காவலர்கள் பயிற்சி மைய வளாகத்தில் சிறைத்துறையின் வேலூர் சரக டி.ஐஜி ஜெயபாரதி வசித்து வருகிறார். இவரது கணவர் சென்னையில் அரசு மதுபான மாவட்ட மேலாளராக இவரது கணவர் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார். இதனை தொடர்ந்து அவரது மனைவியான டி.ஐ.ஜி ஜெயபாரதி வசிக்கும் வீட்டிலும் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹேமசித்திரா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். சிறைத்துறை டி.ஐ.ஜி வீட்டில் லஞ்சஒழிப்புதுறை சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் குற்றம் !
* இந்தியா- பாகிஸ்தான் எல்லை பஞ்சாப் அருகே நுழைய முயன்ற பாக்., பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
* மஹாராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டிற்குள் மாஸ்க் அணிந்து நுழைந்த நபர்கள் கத்தி முனையில் கணவர் , குழந்தைகளை பிணையாக வைத்து மனைவியின் நகைகளை கொள்ளை அடித்து சென்றனர் .
* ஒடிசா மாநிலம் பர்லஹே முன்டி ரயில் நிலையத்தில் ரயில் மீது ஏறி செல்பி எடுத்த 13 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியானார். 2 பேர் காயம்.
* தெலுங்கானாவில் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் கைது. இவர் கடந்த ஆகஸ்ட் முதல் இன்று வரை 6 குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

* பெங்களூரு சிஐடி துணை பெண் எஸ்பி லட்சுமி நண்பர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை.
* கர்நாடக மாநிலம் கோலாரில் ஐ போன் நிறுனத்தை சூறையாடிய சம்பவத்தில் எஸ்எப்ஐ மாணவ சங்கத்தை சேர்ந்த சிலர் கைது .
* கேரளா: தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் செயலர் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
* ஆந்திராவின் ஐ தராபாத் காங்., எம்பி ரேவதிரெட்டி மற்றும் அவரது உதவியாளர் உதய்சிம்கா ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகாததால் கைது.
மது கொடுக்காத மாப்பிள்ளைக்கு வெட்டு
* தெற்கு டில்லி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது.

* காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போஸ்ட்ஆபீஸ், ஏடிஎம் மையம் உள்பட 22 வணிக நிறுவனங்கள் தீக்கிரையாகின. தீ பிடித்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* உ.பி., மாநிலம் அலிகார் பாலிமுகிம்பூரில் நடந்த திருமண விருந்தில் மது பார்ட்டி நடந்தது. இதில் கூடுதலாக மது கேட்ட போது தர மறுத்ததால் ஆத்திரமுற்ற ஒருவர் மாப்பிளையை அரிவாளால் வெட்டினார். காயமுற்ற அவர் மருத்துவமனையில் அனுமதி.
உலக நடப்பு !
* ஈரானிய அரசுக்கு எதிரான விமர்சகர் துருக்கியில் கடத்தப்பட்டார் .
* மேற்கு லண்டன் ஹவுன்ஸ்லோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 25 வயது மதிக்கத்தக்க தாயும் , சேயும் மர்ம முறையில் இறந்து கிடந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE