பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை அறிவிப்பு

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம், பயணச்சீட்டு தொகையில் 50 சதவீதம் சலுகையை அறிவித்துள்ளது.ஏர் இந்தியா விமானம், மூத்த குடிமக்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 50 சதவீத சலுகையை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 60 வயதுக்கு
AirIndia, Announces, 50Percent, Concession, BaseFare, SeniorCitizens, ஏர்இந்தியா, 50 சதவீதம், சலுகை, மூத்த குடிமக்கள்

புதுடில்லி: இந்தியாவை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம், பயணச்சீட்டு தொகையில் 50 சதவீதம் சலுகையை அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானம், மூத்த குடிமக்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 50 சதவீத சலுகையை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இச்சலுகை, இந்தியாவில் நிரந்தரமாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


விமானக் கட்டணத்தில் பேஸ் பேர் (Base Fare)-ல் 50 சதவீதம் சலுகை பெறப் பயணிகள் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் போது, பிறந்த தேதியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.

இதேபோல் பயண நாளில் செக்-இன் செய்யும் போது குறித்த அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். இல்லையெனில் டிக்கெட்டிற்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் டிக்கெட்டுக்கான கட்டணம் திருப்ப வழங்கப்படாது, வரி மற்றும் இதர கட்டணங்கள் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INNER VOICE - MUMBAI,இந்தியா
22-டிச-202018:14:20 IST Report Abuse
INNER VOICE சலுகை முழு டிக்கெட்டின் நேர் பாதியாக இருந்தால் நல்லது.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
18-டிச-202005:35:35 IST Report Abuse
Sundararaman Iyer Prices of food items at any Airport in India is exorbitant, to say the least. Whereas in Changi airport in Singapore it is available at the same price as in downtown Singapore. Why Indian Govt does not have any control on the prices of airport shops???
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-டிச-202021:36:23 IST Report Abuse
M  Ramachandran எதக்கேடத்தாலும் மோடி இடம் முட்டிக்கொள்கிறீர்களே. அரசாண்டவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் பேய்.சொந்த மாக புத்தியை உபயோகஹ படுத்தமாட்டிர்களா.யேற் இந்தியா விற்கும் பிரதமருக்கும் நேரிடையாக என்ன சம்பந்தம். ஏர் இந்தியா ஒரு தனிப்பட்ட நிறுவனம். அதற்கு தனியாக சுயாட்சி உள்ளது.இது கூட தெரியாமல் கருத்து எழுதுபவர்களை எதில் சேர்ப்பது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X