வாஷிங்டன்: கடந்த நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று அதில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் மாபெரும் வெற்றி பெற்றார்.
வரும் ஜனவரி 20-ஆம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்க பிரச்சாரம் களைகட்டி இருந்தது. அப்போது வரலாறு காணாத அளவில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களும், வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளும் தலைதூக்கத் துவங்கின. இதனையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடியும்வரை டுவிட்டர் நிறுவனம் ரிடுவீட் செய்ய அமெரிக்கர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதன்மூலமாக போலி கணக்குகளில் இருந்து பதிவிடப்படும் மிரட்டல்கள், தவறான தகவல்கள், அத்துமீறல்கள் தவிர்க்கப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் நம்பியது.

தற்போது அமெரிக்க தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் டிவிட்டர் நிறுவனம் தேர்தலை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இனி அமெரிக்க அரசியல் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை யாருடைய டுவீட்டை வேண்டுமானாலும் ரீடுவீட் செய்யமுடியும் என டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க டிவிட்டர் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE