அறிவியல் ஆயிரம்
கோபம் குறைய வேண்டுமா
விழாக்காலங்களில் ஊஞ்சல் ஆடுவது வட இந்தியரின் வழக்கம். தமிழகத்தில் சில திருமண நிகழ்வில் ஊஞ்சல் வைபவம் முக்கியம். ஊஞ்சல் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் எழுகின்றன. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்குகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி ஊஞ்சலின் இருபக்க சங்கிலிகளையும் பிடித்து ஆடும்போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. முதுகுத்தண்டுவடம் பலம் பெறுவதால் கழுத்துவலி குறையும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் குறையும்.
தகவல் சுரங்கம்
புலம் பெயர்ந்தோர் தினம்
உலகில் முறையாக இடம் பெயர்ந்தவர்களுக்கு உரிய மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தியும், சமூக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அந்தந்த நாடுகள் செயல்படுத்த வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் டிச., 18ல், உலக புலம் பெயர்ந்தோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல்வேறு காரணங் களுக்காக மாவட்டம், மாநிலம், நாடு என ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் இடம்பெயர்கின்றனர். இடம் பெயர்வோருக்கு ஒவ்வொரு நாடும், உரிய பாதுகாப்பு மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE