குன்னுார்: குன்னுார் மற்றும் அருவங்காடு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கஞ்சா பயன்படுத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி குன்னுார் டி.எஸ்.பி., சுரேஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையில், குன்னுார், அருவங்காடு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கஞ்சா கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் குன்னூர் பஸ் ஸ்டாண்ட் அருகே விற்பனைக்கு கஞ்சா கொண்டுவந்த நபரை, பிடித்தனர். உலிக்கல் வெள்ளாள மட்டத்தை சேர்ந்த குமார் என்கிற ரேகன் டேவிட், 35 என்பது தெரியவந்தது; 500 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல உபதலை பழத்தோட்டம் பகுதியில், அருவங்காடு போலீசார் நடத்திய சோதனையில், ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்த, குன்னுார் கார்ன்வால் ரோடு ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி, 44 என்பவரை கைது செய்தனர்.இருவரையும் குன்னூர் சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE