''அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் செயல்படும் அமைப்புகளுக்கு, எவ்வாறு மரியாதை தர வேண்டுமென்பதை, ராகுல் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:பாதுகாப்பு துறைக் கான பார்லிமென்ட் நிலைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து, ராகுல் வெளிநடப்பு செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 14 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில், இரண்டு கூட்டங்களில்தான், இந்த குழுவின் உறுப்பினரான ராகுல் பங்கேற்றார். 12 கூட்டங்களில், அவர் பங்கேற்கவே இல்லை.
தான் பங்கேற்ற அந்த கூட்டங்களிலும் கூட, 'உருப்படியான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப் படவில்லை' என ராகுல் கூறினாலும், ஆச்சரியப்பட முடியாது.இதுபோன்ற செயல்பாடுகளின் வாயிலாக, பார்லிமென்ட் அமைப்பு முறைகளை அவமதித்து உள்ளார்.
ஒருமுறை, அமைச்சரவை கூடி ஆலோசித்த முடிவுகள் அடங்கிய ஆவணங்களை, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, பொது இடத்தில், கிழித்து எறிந்து, குப்பைத் தொட்டியில் வீசியவர் தான் ராகுல்.அரசிலமைப்புச் சட்ட அடிப்படையில் செயல்படும் அமைப்புகளுக்கு, எவ்வாறு மரியாதை தர வேண்டுமென்பதை, முதலில் ராகுல் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE