இந்தியாவுக்கு கடமைப்பட்டுள்ளோம்: வங்கதேச பிரதமர் உருக்கம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
தாகா:''பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற உதவிய, இந்திய அரசுக்கும், மக்களுக்கும், எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்,'' என, அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.பாகிஸ்தானுடன், 1971ல் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின், 50ம் ஆண்டு துவக்கவிழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. 49 வது சுதந்திர தினம்இந்தப் போர், பாகிஸ்தானிடமிருந்து,
 இந்தியாவுக்கு கடமைப்பட்டுள்ளோம்: வங்கதேச பிரதமர் உருக்கம்

தாகா:''பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற உதவிய, இந்திய அரசுக்கும், மக்களுக்கும், எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்,'' என, அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.

பாகிஸ்தானுடன், 1971ல் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின், 50ம் ஆண்டு துவக்கவிழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. 49 வது சுதந்திர தினம்இந்தப் போர், பாகிஸ்தானிடமிருந்து, வங்கதேசம் பிரிந்து, தனி நாடாக உருவாக வழி வகுத்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் வங்கதேசத்தில், 49 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, நேற்று மாநாடு நடந்தது. இதில், கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட, அனைத்து அம்சங்கள் குறித்தும், இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இதன்பின், மோடி பேசியதாவது:, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கு துாணாக, வங்கதேசம் விளங்குகிறது. அந்த நாட்டுடன் உறவை மேம்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும், எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கொரோனாவால் இந்த ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது.

இந்த காலத்தில், கொரோனா தடுப்பூசி, சுகாதாரத்துறையில், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றின.இவ்வாறு, அவர் பேசினார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசியதாவது: பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெறுவதற்காக உயர் நீத்த,மூன்று லட்சம் தியாகிகளுக்கும், அஞ்சலி செலுத்துகிறேன். 1971-ம் ஆண்டு நடந்த போரில் உயிர் நீத்த, இந்திய ராணுவ வீரர்களுக்கும், என் அஞ்சலியை செலுத்துகிறேன். சிறப்பு தபால் தலைபாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து, வங்கதேசத்தின் விடுதலைக்கு துணை நின்ற இந்திய அரசுக்கும், மக்களுக்கும், எந்நாளும் கடமைபட்டுள்ளோம். கொரோனாவை தடுக்க, இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இவ்வாறு, அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, 55 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட, மேற்கு வங்கத்தின் ஹல்திபரி - - வங்கதேசத்தின் சிலாஹதி இடையிலான ரயில் சேவையை, பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனா வும், நேற்று மீண்டும் துவக்கி வைத்தனர். மஹாத்மா காந்தி, வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மான் பற்றிய இணையவழி கண்காட்சியை துவக்கி வைத்ததுடன், முஜிபுர் ரஹ்மான் சிறப்பு தபால் தலையையும், இருவரும் வெளியிட்டனர். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில், ஏழு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X