அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா வீட்டில் இருந்து பார்க்க அறிவுறுத்தல்

Added : டிச 17, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழாவை வீட்டில் இருந்து பார்க்க, மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், ஜன., 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை, துவக்க விழாவுக்கான பார்லிமென்ட் குழு செய்து வருகிறது. அதிகாரிகள்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழாவை வீட்டில் இருந்து பார்க்க, மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், ஜன., 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை, துவக்க விழாவுக்கான பார்லிமென்ட் குழு செய்து வருகிறது.

அதிகாரிகள் கூறியுள்ளதாவது:வழக்கமாக, அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, இரண்டு லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும். தற்போது, கொரோனா பரவல் காரணமாக, விழாவை, மிகவும் எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பார்லி.,யின், எம்.பி.,யாக பதவியேற்க உள்ளவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழாவை, நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவை, மக்கள் வீடுகளில் இருந்தே, 'டிவி'யில் பார்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


ரோ கன்னாவுக்கு பதவி

அமெரிக்க பார்லிமென்டின் இந்தியாவுக்கான குழுவின் துணைத் தலைவராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, ரோ கன்னா, 44, நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 1994ல் துவக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், முதல் முறையாக துணைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, பிரதிநிதிகள் சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்க உள்ளதால், காலியாக உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் செனட், எம்.பி., பதவிக்கு, ரோ கன்னா நிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X