பாரிஸ்:பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு, கொரோனா தொற்று, உறுதி செய்யப்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு, 42, கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன் முடிவில், அவருக்கு தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், ஏழு நாட்களுக்கு தன்னை தனிமைப் படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு, 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறைக்கு, பிரான்ஸ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பிரான்ஸ் சுகாதாரத்துறை, அதை ஏழு நாட்களாக குறைத்து, செப்டம்பரில் உத்தர விட்டது. 'தனிமைப்படுத்தப்பட்டாலும், அதிபர் தன் வழக்கமான அலுவல்களை, அதிபர் மாளிகையில் இருந்து தொடர்வார்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் நடந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில்,மேக்ரான் பங்கேற்றார். அப்போது, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார்.தெற்கு ஐரோப்பிய நாடான போர்சுகீஸ் அதிபரை, சந்தித்து பேசினார். அதன்பின், அமைச்சரவையின் வாராந்திர கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, பிரதமர், தன்னை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளார். மேற்காசிய நாடான, லெபனானுக்கு அடுத்த வாரம் செல்வதாக இருந்த அதிபர் மேக்ரானின் பயணம், ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE