அதிருப்தி தலைவர்களுடன் சோனியா நாளை சந்திப்பு

Added : டிச 17, 2020
Share
Advertisement
புதுடில்லி:காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய, 23 அதிருப்தி தலைவர்கள், கட்சித் தலைவர் சோனியாவை, நாளை சந்திக்க உள்ளனர்.காங்., கட்சிக்குள், கடந்த சில மாதங்களாக, சலசலப்பு நிலவி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், கட்சித் தலைமைக்கு எதிராக, அவர்கள் எழுதிய கடிதம், தேசிய அரசியலில் பெரும்

புதுடில்லி:காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய, 23 அதிருப்தி தலைவர்கள், கட்சித் தலைவர் சோனியாவை, நாளை சந்திக்க உள்ளனர்.

காங்., கட்சிக்குள், கடந்த சில மாதங்களாக, சலசலப்பு நிலவி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், கட்சித் தலைமைக்கு எதிராக, அவர்கள் எழுதிய கடிதம், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில், காங்., கட்சியின் படுதோல்வியை அடுத்து, கட்சித் தலைமைக்கு எதிராக மீண்டும் குரல்கள் ஒலித்தன. அப்போது, முன்னாள் அமைச்சர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத், சிதம்பரம் உள்ளிட்டோர், பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர்.இதையடுத்து, கடிதம் எழுதிய, அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காங்., தலைவர் சோனியாவை, கட்சியின், 23 அதிருப்தி தலைவர்கள், நாளை சந்திக்க உள்ளனர்.இந்த சந்திப்புக்கு, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத், ஏற்பாடு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.அந்த சந்திப்பில், சோனியாவுடன், அவரது மகனும், காங்., - எம்.பி.,யுமான ராகுலும் பங்கேற்க உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X