சென்னை:தமிழக அரசின் சாதனைகளை, மக்களிடம் எடுத்து செல்ல, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இளைஞர்,இளம்பெண்கள் பாசறை, மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில செயலர் பரமசிவம் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதல்வர் வேட்பாளராக, பழனிசாமியை., அறிவித்த, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவ - மாணவியருக்கு, மருத்துவ கல்லுாரியில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களையும், பொய் வாக்குறுதிகளையும், கபட நாடகங்களையும், மக்கள் மன்றத்தில் தோலுரித்து, அரசின் மகத்தான சாதனைகளையும், சமூக நல திட்டங்களையும், மக்களிடம் எடுத்து செல்வது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE